Sunday, July 5, 2009





இப்போதெல்லாம்
தோற்பதும் பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்

மது ..


நீ கொடுத்த அன்பளிப்பால்
குடிப்பதை நிறுத்திவிட்டேன்


அந்த கிளாசில்....

புன்னகை


பூமியில் பூப்பது எல்லாம் பூக்கள் என்றால்
உன் புன்னகையை என்ன என்று சொல்வது ...

காதல்


காதலுக்கு கண் இல்லை யார் சொன்னது
காது .மூக்கு,வாய் ...எதுவும் இல்லை
மனசு இருந்தால் ....

மரம்


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்

பெரும்பாலவரின் தூக்கம் மரத்தடியில் என்பதாலா ???

பஸ் ...


படியில் பயணம்
நொடியில் மரணம்

அதான் பெரும்பாலான பேருந்துகளில்

படிக்கட்டுகள் இல்லையோ ???

Monday, June 1, 2009

பள்ளி அறை


கா ... பசி மயக்கம்
மயங்கி விழுகிறேன்
உன் மார்புக்கு நடுவே ....

அத்தனைக்கும் ஆசைப்படு


அத்தனைக்கும் ஆசைப்படு

சத்குரு சொன்னது ..

அத்தனைக்கும் கஷ்டபடு ...

என் குரு சொன்னது ..


நண்பர்கள்


நண்பர்களுக்காக ......
பத்தாவதில் நாலும் (நல்லதும் & கெட்டதும் )தெரிய வைத்த பழத்திற்கும்
மரணத்தின் கடைசி விளிம்பில் நான்
தலையில் பலத்த அடி
என் தலையை தூக்கும் ஆப்பையின் கையில்
ரேகை தெரியாத அளவு ரத்தம்
முரட்டு தைரியம் பிழைத்து விடுவேன் என்று
இரண்டு நாட்களுக்கு பிறகு கண் விழித்துபார்கையில்
வீங்கிய கண்களுடன் அம்மா & அப்பா
நண்பர்கள் சுற்றியும்
மனதில் நல்லவன் என்ன
எல்லோர் வீட்டையும் நல்லவனாக நடித்து ஏமாத்தும்
பருப்பான அஞ்சரை
காலரை தூக்கி விட்டுத்தான் நடக்கிறேன்
வீதியில்
எனக்கும் நல்ல நண்பர்கள் என்று .........................................

கன்னிகளும் கற்பழிக்க படுகிறார்கள்

காளைகளின் காம பார்வையால் ...

உன்னுடன் சுற்றிய வார கடைசி ....
மெரினாவின் ஸ்பெஷல் பிஷ் கறி..
சினிமா தியேட்டர் கடைசி ஓரம் ..
டவுன் பஸின் நெரிசல் ஸ்பரிசம் ..
நம் கற்பனை குழந்தையின் பெயர்கள்..

சண்டை போட்ட பாப் கார்ன்

மாலை மழைநேர காபி

நான் ரசித்த எதுவும் நீயில்லாமல் பிடிக்கவில்லை





முள் ...


உன் இதழ் ரோஜவிற்கு மட்டும்

முட்கள் இருப்பதில்லை ...

Thursday, May 28, 2009

தீபாவளி ...


என்னை காரணமில்லாமல் திட்டிய பக்கத்து வீட்டு நரகாசுரனுக்கு

அன்று தீபாவளி

கிருஷ்ணனாக அம்மா ...

மனித நேயம் ...



காலை உணவிற்கு பிறகு ஆரம்பித்த உண்ணாவிரதம்


மத்திய உணவிற்கு முன்பே முடிந்தது .....


மனித சங்கிலி ...மறைமுக உடன்பாடு


சுமூகமாக முடிந்த குடும்ப அரசியலின் வெற்றி


அதற்கு விலை கொஞ்சம் அதிகம்தான்


சில பல லட்சம் உயிர்களுடன் ஈழர் தலைவனும்




ஐயோ .....




நேரம் ஆயிடிச்சு வா வா ட்வென்டி ட்வென்டி மேட்ச் பார்க்கலாம்


என்னடா மனிச ஜென்மம்


புலிகள்


இலங்கை குண்டு வெடிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை ஆறு

புலியானோர் எண்ணிக்கை அறுபது......

உழைப்பு = அப்பா


மதியம் ரெண்டு மணி ..அக்னி வெயில்

பாதி பசி மயக்கம் ...இன்னும் பதினாலு புடைவைகள் விற்றுவிட்டால்

முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிடலாம்

தளர்த்த அப்பாவின் நினைவில் நாங்கள் வர

புது உற்சாகத்தில் அடுத்த வீதி நோக்கி வேகமாய் நடக்க

புடவையும் விற்றது அப்பாவின் கடின உழைப்பால்

மத்திய சாப்பாடும் ஆகிவிட்டது இரவு எட்டு மணிக்கு எங்கள் வீட்டில்

குழப்பம்


எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தலை குனித்து நிற்காத அப்பா

யார் என்ன கெடுதல் செய்தாலும் மன்னிக்கும் சாரி மறக்கும் அம்மா

என் குடும்பம் நிலை குலைந்த போது தோள்கொடுத்த நண்பர்கள்

எப்போதும் தொல்லை கொடுக்கும் சில குடும்ப நண்பர்கள்
என்னை உருவாக்குவதில் இவர்கள் பெரும் பங்கு வகித்தாலும்

நான் ஏன் இவர்களுக்காக எதுவுமே இதுவரை செய்யவில்லை

குழப்பத்தில்.......................................


சுயநலவாதி !!!


கழிவரை சென்றாலும் சொல்வாயே ..

ஏண்டி இதை மட்டும் மறைசிட்ட ..

சுயநலவாதி ...

Friday, May 22, 2009

வாழ்வோம் வாழ்விப்போம் .......




வேளா வேளைக்கு வயிறு முட்ட சோறு ..





உதவி செய்ய கொஞ்சம் சாம்பார் ,ரசம் ....மற்றும் சில பல ஐடம்கள்
எல்லாம் ஓகே ..எப்படி சாத்தியம் இது ....





கொஞ்சம் நினைபோம் கோமணம் கட்டிய மண்ணின் மைநதர்களை .....





வாழ்வோம் வாழ்விப்போம் .......

Tuesday, May 19, 2009

என்ன தாண்டி எதிர்பார்குற


எண்ணை வச்சு தலைய சீவினேன் ..


தம்மையும் விட்டுட்டேன்


தண்ணி மறந்துட்டேன்


சம்பாதிகவும் செய்யுறேன்


கொஞ்சம் அழகா இருக்கிறேன் ..


.....க்காளி வேற என்ன தாண்டி எதிர்பார்குற .......


தென்றல்


நீ அடித்தால் தான் எனக்கு பிடிக்கிறது




தென்றல் !!!

முத்தம்


தினமும் நனைகின்றேன்

உன் முத்த மழையால் ....

இதுவும் மாறும்


பட்டங்கள் பல ,சில பல லட்சங்கள் , நல்ல வேலை ..


அப்பாட நிம்மதிடா ....பெருமை படாதே


இதுவும் மாறும்

Monday, May 18, 2009


ஏண்டி கொல்லுற உன் பார்வையால


உன்னை அப்படியே ..........................................................

பைத்தியம் பிடிக்கிறது


உன்னை பார்வையால் .....

சாகும் சந்தர்ப்பம் கிடைத்தால் சாகலாம் ...


அம்மாவிற்காக ........................

காதல்ஆ அட போங்க தம்பி


சந்தர்ப்பம் கிடைகாதவனின் ஆதங்கம் ...



என் காதலும் தோற்றது ..


என்னவளின் திருமணத்தில் ...

நிலவும் பெண்ணும் அழகு



தொலைவில் இருக்கும் வரை ....

பகவத் கீதை





பரிட்சை பயம் ...



இரவெல்லாம் படித்தேன் பகவத் கீதை ...

அம்மா




ஊர் சுத்தும் எனக்காக


கோவில் சுத்து கிறாள் ............அம்மா





புரியாத பிரியம்


பிரியும் போது புரியும் .....

இன்னும் துவைக்காமல் வைத்து இருக்கிறேன் ...


நீ போட்ட என் சட்டையை


உன் வாசத்திற்காக ....

அட என்னமா என்னிடம் இருக்கிறது ....

பைத்தியமாய் இருக்கிறாய் ......



மகாலக்ஷ்மி



பெயருக்கு தகுந்தார் போல இருந்தாய்


பூஜை அறையில் ....


என்றும் நினைவுகளுடன் ......................

Saturday, May 16, 2009

அப்பா ....




அப்பா என்னிடம் அதிகம் பேசுவார்.....

ஆனால் பேசும் மொழியோ ..........


...........மெளனம்

Thursday, May 7, 2009


ஜோதிடன் தடுமாறினான் ........


உழைபாளியின் கைகளில் இல்லை
ஆயுள் ரேகை .....